வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்   விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

 

 

 

 


 

 





 












வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையிரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  நேற்று   விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

மட்டக்களப்பு விமான படையின் படகுமூலம் இன்று இந்த விஜயத்தினை முன்னெடுத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன் போது கன்னன்குடா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி அவர்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

பின்னர் வலையிரவு பாலத்தில் வெள்ளநீர் செல்வதனால் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் தங்களது போக்குவரத்தை முன்னெடுத்து வருகின்றனர் அதனை நிவர்த்தி பண்ணும் வகையில் மக்களின் பாதுகாப்பான போக்குவரத்தினை ஏற்படுத்தும் முகமாக பிரதேச செயலக உதவியுடன் உழவு இயந்திரங்கள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்திருந்தார் அந்த செயற்பாட்டினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்தோடு வெள்ள நிலைமைகளில் மக்களின் தேவைகள் என்ன என்பதனையும் கேட்டறிந்து அதற்கான வேலை திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அங்கு சந்தித்த மக்களிடம் தெரிவித்தார்.