மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் திருடிச் சென்ற மாடுகளைஅறுத்து இறைச்சி விற்பனை ,பொலிசாரின் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

 


காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் ஒருவருக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருந்த இரு மாடுகளை திருடிச் சென்று பாலமுனை நடுவோடையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து அவற்றை அறுத்து வெளியாருக்கு விற்பனை செய்த நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.ரஹீம் தெரிவித்தார்.

சுற்றிவளைக்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேக நபர்கள் தப்பியோடி உள்ள நிலையில் அவர்களால் அறுவை செய்யப்பட்ட சுமார் 60 கிலோ இறைச்சி மற்றும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மாட்டு இறைச்சி மற்றும் உபகரணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில்  பொலிஸாரால் அழிக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.