ASM.நுசைப்
கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் சிறப்புற்று விளங்கும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலய கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று 2024.11.07 வியாழக்கிழமை முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலய சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
மட்டு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்தும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர்.