அதிக ஆதரவினை பெற்று மாவட்டத்திலேயே ஒரு ஆசனத்தை பெறக்கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே- எம்.எல்.ஏ. எம் ஹிஸ்புல்லா

 

 

 

 

வரதன்
 

 

 

 

 இடம்பெறவுள்ள பொது தேர்தலில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காத கட்டத்தில் நாட்டை கட்டி எழுப்புவதற்கும் அரசாங்கத்தினை முன்னெடுப்பதற்கும் எமது கட்சி ஆதரவினை அளிக்கும் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ. எம் ஹிஸ்புல்லா
எதிர்வரும் 14ஆம் தேதி இடம்பெற உள்ள பாராளமன்ற தேர்தல் ஆனது ஆட்சி மாற்றத்தின் பின் இடம்பெறுகின்ற  ஒரு முக்கியத்துவம் மிக்க ஒரு தேர்தல் ஆகும் மக்களின் அதிக ஆதரவினை பெற்று  மாவட்டத்திலேயே ஒரு ஆசனத்தை பெறக்கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே இம்முறை புதிய அரசாங்க த்தின் நல்ல செயற்பாடுகளுக்கு முஸ்லிம்   காங்கிரஸ் கட்சி என்றுமே ஆதரவு அளிக்கும்
நாட்டை கட்டி எழுப்பி புரையோடி போயுள்ள வடக்கு கிழக்கு இன பிரச்சனை க்கான தீர்வுகளை காண்பதற்கு லஞ்சம் ஊழல் அற்ற நீதியான ஒரு அரசாங்க த்தை முன்னெடுப்பதற்காக எல்லா மக்களும் சமமானவர்கள் என்ற சமத்துவக் கொள்கைக்கு எமது கட்சி என்றுமே ஆதரவளிக்கும்


 இடம்பெறவுள்ள பொது தேர்தலில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காத ஒரு கட்டத்தில் புதிய அரசாங்கத்தினை முன்னெடுப்பதற்காக அவர்கள் எங்களது ஆதரவினை கூறினால் எமது கட்சி வேண்டிய ஆதரவினை வழங்கி எமது நாட்டை கட்டி எழுப்புவதற்கு என்றுமே உதவியாக இருக்கும்


 ஒருவேளை நாங்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும் இந்த அரசாங்கம் கொண்டு வருகின்ற நல்ல திட்டங்களுக்கு வேண்டிய ஆதரவினை வழங்கு வோம் இந்த புதிய அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது கடந்த காலங்களில் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேண்டிய தேவைகளும் உள்ளதென

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ. எம்  ஹிஸ்புல்லா  இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்