கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்- தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவ. சந்திரகாந்தன்.

 

 


 

  வரதன்



 

இடம்பெறவுள்ள பொது தேர்தலில் மக்கள் நன்றாக சிந்தித்து  வாக்களிக்க வேண்டும்  தற்போது வந்துள்ள ஆட்சி மாற்றத்துடன் இருக்கின்ற அரசாங்கம் மக்களை உயர்த்த வேண்டுமாக இருந்தால் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் அதன் மூலம்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்- தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவ. சந்திரகாந்தன்.


இடம்பெறவுள்ள பொது தேர்தலில் மக்கள் நன்றாக சிந்தித்து  முன் உதாரணமாக அமைதியையும் நிம்மதியையும் அபிவிருத்தியையும் நாங்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்தவுடன் புதிய உத்வேகத்துடன்  இளைய அரசியல் வாதிகளையும் உருவாக்கியுள்ளோம் இதனை முன்மாதிரியாக கொண்டு வரும் காலங்களில் நாம் கடுமையான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அதற்கு எதிர்காலம் எவ்வாறு துணை செய்யப் போகின்றது


அதற்கு முக்கியமாக தற்போது வந்துள்ள ஆட்சி மாற்றத்துடன் கூடிய பொருளாதார நெருக்கடியோடு அடுத்த வருடம் முன்னெடுக்க உள்ள வரவு செலவுத் திட்டம் எவ்வாறு அமையப் போகின்றது அதிலே எங்களுடைய பங்களிப்பு என்ன அல்லது வர இருக்கின்ற அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கமாக இருக்க முடியுமா நமது கட்சி இம்முறை தேர்தலில் மூன்று அதிகமான ஆசனங்களை பெற்று பாராளுமன்றம் செல்கின்றபோது தற்போதுள்ள ஜனாதிபதியை போன்று நாம் பலமான எதிர்க்கட்சியாகவா அல்லது ஆளுங்கட்சியாகவா இருக்கப் போகின்றோம்


இனக்கபாட்டு அரசியலை முன்னெடுக்கின்ற கட்சி என்ற வகையில் எங்களது மக்களை உயர்த்தும் வகையில் அபிவிருத்தி அரசியலை முன்னெடுக்க முன்னெடுத்து வருகின்ற ஒரு இயக்கம் ஜனாதிபதி தெரிவித்துள்ளது போன்று எதிர்க்கட்சி இல்லாத ஒரு அரசாங்கம் இருந்தால் என்று கூறியுள்ளார் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அதிகாரங்கள்  பகிரப்பட வேண்டும்


 தென்பகுதியில் கூட பாதிக்கப்பட்ட மக்களை உயர்த்த வேண்டுமாக இருந்தால் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் அதன் மூலம்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார் .