வரதன்
மாவட்டத்தின் பிரதான வாக்கு எண்ணும் நிலையமான இந்து கல்லூரியில் தேர்தல் ஆயத்த பணிகள் சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் குழுவினர் இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
தேர்தல் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட உள்ள வாகனங்கள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்பட படவுள்ளது - மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம் பி எம் சுபியான்.
பாராளுமன்ற பொது தேர்தலுக்கான பணிகள் மாவட்டத்தில்
இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள்
உரிய நேரத்திற்கு வருகை தந்து வாக்கு பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்
களுக்கு எடுத்துச் செல்லுமாறும் இதற்காக போக்குவரத்து கடமைகளில் ஈடுபட உள்ள
வாகனங்கள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும்
வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு
வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட உள்ளதாகவும் அதன் பின்பு தபால் மூல
வாக்களிப்புகள் எண்ணப்படவுள்ளது .
இம்முறை தேர்தல் பணிகளில் 1900
போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதுடன் 87 விசேட கண்காணிப்பு போலீஸ்
பிரிவினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல்
கண்காணிப்பு பணிகளில் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பணிகளில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர், இடம்பெற உள்ள தேர்தலை எவ்வித வன்முறைகளும் இன்றி
அமைதியாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தேவை, எனவும் தேர்தல்
பிரச்சாரப் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த அமைதியான காலகட்ட த்தில் எவரும்
சட்டவிரோத பிரச்சாரப் பணிகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அதனை மீறி நடப்போர்
மீது கடுமையான சட்ட நடவடிக்கை தேர்தல் திணைக்களத்தினால்
முன்னெடுக்கப்படும் என மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சிபிஎம் சுபியான்
என்று இந்துக்கல்லூரியின் தேர்தல் பணிகள் பார்வையிட்டதன் பின் ஊடகங்களுக்கு
இவ்வாறு கருத்து தெரிவித்தார்.