பலாத்காரமாக வீட்டினுள் நுழைந்த நபரொருவர், அங்கிருந்தவர்களை பயமுறுத்தி, யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று வலஸ்முல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் நேற்று (07) இரவு வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரேவெல பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி யுவதியை கடத்திச் செல்ல முற்படுவதாக 119 என்ற பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார் 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 தடைசெய்யப்பட்ட கத்திகள், இரும்பு கம்பிகள் மற்றும் இரும்புத் துண்டுகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்த சந்தேகநபரை பெரும் முயற்சிகளை மேற்கொண்டு கைது செய்ததாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர்.
சந்தேகநபர் குறித்த சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், அதனை சந்தேகநபர் சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பை துண்டித்துவிட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில், தற்போது சந்தேகநபர் குறித்த யுவதியை கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான