வரதன்
எதிர்வரும் 14ஆம் தேதி இடம்பெற உள்ள பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் இன்று தனக்குத் தானே தபால் மூல வாக்கினை பதிவு செய்து கொண்ட சம்பவம் பதிவாகியது.
எதிர்வரும் 14ஆம் தேதி இடம்பெற உள்ள பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களி வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கூறப்பட்டிருந்த போது அரசாங்க அதிகாரியான (அ.கருணாகரன்) இவர் அதற்கு விண்ணப்பித்து இருந்தார்.
இருப்பினும் இறுதி கட்டத்தில் இவர் தமிழரசு கட்சியின் முதலாம் நம்பர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார், அதன் பின்பு அவர் தேர்தல் திணைக்களத்தில் தபால் மூல வாக்களிப்பிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் அது அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால் தபால் மூல வாக்களிப்பின் இறுதி தினத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் இன்று தனக்குத் தானே தபால் மூல வாக்கினை பதிவு செய்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் போது இந்த சம்பவம் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் இன்று மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தனக்குத் தானே தபால் மூல வாக்களித்த சம்பவம் ஒன்று பதிவாகியது