பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் ஒரு குரலாக இருக்க வேண்டும்- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ்

 

வரதன்
 

 

 

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் ஒரு குரலாக இருக்க வேண்டும் புதிய தலைமுறை மாற்றக்கூடிய ஒரு சக்தியாக வாக்குரிமை உள்ளது-  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ்


சரியான ஒரு பிரதிநிதியை ஒரு தலைமையை நீங்கள் தெரிவு செய்யும் போது தான் அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு  மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க முடியும் எதிர்கால திட்டங்களுடன் மக்கள் நலன் சார்ந்த வேலைத்  திட்டங்களை முன்னெடுப்பவர்களையே நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்தவர்களை நீங்கள் இனம் கண்டு அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்


மட்டக்களப்பு மக்களின் ஓங்கிய குரலாக நான் பாராளுமன்றத்தில் இருப்பேன் என உறுதியளிக்கிறேன் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தை ஒரு மாதிரி மாவட்டமாக முன்னெடுக்க வேண்டிய சகல திட்டங்களும் என்னிடம் உள்ளது மக்களுக்கு வேண்டிய கல்வி அறிவினை நாம் வழங்கும் போது அவர்கள் வாக்குரிமை பற்றியும் எதிர்கால பொருளாதார மேம்பாட்டினையும் அவர்கள் வகுத்துக் கொள்ள முடியும்.


எமது கட்சி கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் 65,000 வாக்குகளை பெற்றுக் கொண்டது அதன் பின்னர் எமது கட்சி தலைவரினால் கடந்த வருடங்களில் பாரிய அபிவிருத்தி திட்ட பணிகள் எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக எமது கட்சியின் மீதும் தலைவரின் மீதும் கொண்ட நல்ல எண்ணத்தின் காரணமாக தமக்கு கிடைக்கின்ற வாக்குகள் இம்முறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

 என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்