வரதன்
வரதன்
இடம்பெற உள்ள இந்த தேர்தலில் சங்கும் இல்லை படகும் இல்லை நமது சின்னமான வீட்டுச் சின்னமே எழுந்து நிற்கும் அதிக ஆசனங் களை மாவட்டத்தில் கைப்பற்றும்- தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் இடையே பிரிவினையை உண்டாக்க வேண்டும் என தமிழர்களின் வாக்கை பிரித்து அவர்களின் பிரதி நிதித்துவத்தை குறைத்து பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரலை நசுக்குவ தற்காகவே அதிகமான சுயேட்சை குழுக்கள் அரசியல் கட்சிகள் களம் இறக்கப் பட்டுள்ளன இவற்றையெல்லாம் நாம் நன்கு உணர்ந்து இதனை முறியடித்து நிராகரித்து இந்த தேர்தலில் வீட்டுச் சின்னத்துக்கு எமது மக்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தேர்தல் முறையில் அடிப்படையில் எமது கட்சி யின் சொந்த சின்னத்தில் தேர்தல் கேட்பதென்று பின்பு ஆட்சி அமைக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்றாக இணைந்து செயல்படுவது என்று ஆனால் தமிழரசு கட்சி சொந்த சின்னத்தில் கேட்டது ஆனால் வெளியேறி யவர்களுக்கு அவர்களது சொந்த சின்னத்தில் கேட்க முடியவில்லை அவர்களு க்கு ஒரு முகமூடி தேவைப்பட்டது பின்பு அது சங்காக மாறியது இதனை மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள்
இடம்பெற உள்ள இந்த தேர்தலில் சங்கும் இல்லை படகும் இல்லை நமது சின்னமான வீட்டுச் சின்னமே எழுந்து நிற்கும் அதிக ஆசனங்களை மாவட்டத்தில் கைப்பற்றும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா
சரவணபவன் மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது
இவ்வாறு கருத்து தெரிவித்தார்