பொதுத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்- அலி ஸாஹீர் மௌலானா

 

 


 


IM.அம்ஜத்

 

 

 

 

 

முன்னாள் அமைச்சர்
அலிசாஹிர் மௌலானா அவர்கள் பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது ஆதரவு யாருக்கு என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அலி ஸாஹீர் மௌலானா அவர்கள் விடுக்கும் செய்தி எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கனத்த மழைக்கு மத்தியில் நேற்று  வெள்ளிக்கிழமை ஏறாவூர் வாவிக்கரை வீதியில்  இடம்பெற்றது .

இதில் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான I.A. வாசித் ஆசிரியர் , MIM. தஸ்லீம் , காத்தான்குடி முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமத்லெப்பை உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி பொதுக் கூட்டத்தின் போது தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் அலிஷாஹிர் மௌலானா உரையாற்றும் போது எதிர்வரும்  14ம் திகதி இடம்பெறும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்டார் .