யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் மரணித்துள்ளார்

 


சிறிபுர- கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 34 வயதுடைய சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

தனது பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், யானையிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியே இவ்வாறு மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.