பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ?

 

பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
 


 

 பீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி நாட்டரிசி பெறப்பட்டதன் பின்னர் உற்பத்தி செய்யப்படுவதாக   சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் கருத்து தெரிவித்த யூ.கே சேமசிங்க,

"பீர் தயாரிக்க பச்சை அரிசி தேவை. ஆனால் பீர் தயாரிக்க தேவையான பச்சை அரிசி நாட்டரிசியில் இருந்தே பெறப்படுகிறது. எனவே, பீர் உற்பத்திக்கு அதிக சதவீதத்தை ஒதுக்கும் போது நாட்டரிசி உற்பத்திக்கு தேவையான நெல் பற்றாக்குறை உள்ளது. "

இதேவேளை, அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது வரை கட்டுப்பாட்டு விலையில் அரிசி கிடைக்கவில்லை என விற்பனை நிலைய உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டது.

நிலைமையை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, பாரிய அரிசி வர்த்தகர்களை அழைத்து கலந்துரையாடிய நிலையில், சில்லறை சந்தையில் நிலவும் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.