இரண்டு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால்; மட்டக்களப்பில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் - வேட்பாளர் அ.ராஜ்குமார்!!

பாராளுமன்ற தேர்தலின் ஊடாக இம்முறை மட்டக்களப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால் மட்டக்களப்பில் துரித அபிவிருத்து நடக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.ராஜ்குமார் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இடம் பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் போது வேட்பாளர்களான தம்பிப்பிள்ளை சிவானந்த ராஜா மற்றும் அன்டனிசில் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மீனவ சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களது கருத்தினையும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், எமக்கு இம்முறை இருவரை இங்கிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க உதவுவீர்களாக இருந்தால் இங்குள்ள முகத்துவாரத்தை அகலப்படுத்து ஆழப்படுத்தித் தருவோம். அதன் ஊடாக இங்கிருக்கும் மீனவர்கள் மிகுந்த நன்மையை அடையலாமென்றும் கருத்து தெரிவித்திருந்தார்.