வரதன்
எமது கட்சியில் உள்ள திறமையானவர்களை கொண்டு நாட்டை திறம்பட வழி நடத்துவதே எமது நோக்கம் அதற்காக ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த எமக்கு பலமான பாராளுமன்ற கட்டமைப்பு ஒன்று தேவை- தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் திலிப் குமார்
அரசியல் கலாச்சாரத்தின் மாற்றமானது அரசியல் இதனை நாம் முழுமையாக மாற்றி உள்ளோம்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் சஜித் பிரேமதாசாவிடம் இருந்த உறுப்பினர்கள் இன்று ரனிலில் பின்னால் இருந்திருப்பார்கள் அதே மாதிரி சஜித் பிரேமதாசா வெற்றி பெற்றிருந்தால் ரணிலில் பக்கம் இருந்தவர்கள் இன்று சஜித்துடன் இணைந்து இருப்பார்கள்
ஆனால் இன்று இந்த இரண்டு தரப்பும் வெளியில் நின்று எங்களுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார் கலந்த காலங்களில் லஞ்சம் ஊழல் களவு கொலை போன்ற மோசமான அரசியல் கலாச்சாரங்களைக் கொண்ட இவர்களை என்றுமே இணைத்துக்கொள்ள போவதில்லை என்று எமது ஜனாதிபதியும் தெளிவாக தெரிவித்துள்ளனர்
எமது கட்சியில் உள்ள திறமையானவர்களை கொண்டு நாட்டை திறம்பட வழி நடத்துவதே எமது நோக்கம் அதற்காகவே மக்கள் எமக்கு 5 வருடம் தந்துள்ளனர் அதற்காக நாம் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும் எல்லாம் வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கு எமது கட்சிக்கு பலமான பாராளுமன்ற கட்டமைப்பு ஒன்று தேவை
என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வா. திலிப் குமார் மட்டக்களப்பில்(05.11.2024) மாலை இடம்பெற்ற இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்