இலங்கை திரிபோசா நிறுவனம் மூடப்படுமா ?

 


இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது ஜயகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் அந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திரிபோஷா நிறுவனத்தினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், எடை குறைந்த குழந்தைகள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இது நாட்டின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு திட்டமாகும்.

தற்போது, 6 இலட்சத்து 64,920 தாய்மார்களுக்கும், 9 இலட்சத்து 25,172 குழந்தைகளுக்கும் திரிபோஷா வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிராகப் பல அமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.