மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த மதுபான உற்பத்தி நிலையம் இன்று (07) முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிராமத்தின் பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு ( 06) பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.