FREELANCER
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்ஜனி கணேசலிங்கம் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம் பெற்ற சத்திர சிகிட்சைக் கூட அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இவ் நிகழ்விற்கு விசேட விருந்தினர்களாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித்த குணரத்ன மகிபால, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக சுமார் 320 மில்லயன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதியில் அதி நவீன வசதிகளுடன் 4 சத்திர சிகிட்சைக் கூடங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை நிருவாகத்தினரால் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .