மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவன் ஓவியர் ஜெ.பவிலோஜ் தேசிய "சரித்திரம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .

 

 

 










இலங்கையின் முதல் தமிழ் மாடலிங் அகடமியால் ( பிரதீப் மாடலிங் அகடமி) இவ் விருது பரிந்துரைக்க பட்டு மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவன் ஓவியர் ஜெ.பவிலோஜ் தேசிய "சரித்திரம்" விருது வருணி ரணதுங்க (miss . Srilanka 2023 and miss. Global international 2024) அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது .

இவர் பல பரிமானங்களை கொண்ட வளர்ந்து வரும் சாதனையாளர் ஆவார் . இவர் உருவாகிவரும் எழுத்தாளர் ,உலக சாதனை புரிந்த ஒப்பனையாளர், மொடன் ஓவியர் , fashion model , மாணவர் , சமூக மற்றும் விவசாய ஆர்வலர் என்பன குறிப்பிட தக்க விடயம் .

தற்போது இந்தியாவில் வெளியிடப்படவிள்ள நூல் ஒன்றுக்கு முன்அட்டை ஓவியம் வரைதல் தொடர்பான செயற்பாட்டில் ஈடிபட்டு வருகின்றார் என்பது குறிப்பிட தக்கது, மற்றும் சுயசரிதை நூலும் எழுதிவருகின்றார்.

 பல இடங்களில் தன்னை மட்/ இந்துகல்லூரி மாணவர் எனவும் பெருமையாக இனங்காட்டி கொள்கிறார் , இவரது சாதனை பயணம் தொடர எங்கள் ஊடகம் சார்பாக வாழ்த்துகின்றோம்