மட்டக்களப்பு ஏறாவூரில் தேசிய மட்டத்தில் சாதித்த சாதனையாளர்களுக்கு மகத்தான வரவேற்பு.



 








 

 

 

(N.M.M.அக்மல் -ஏறாவூர்)

 

 

 

தேசிய ரீதியில் எறிபந்து சம்மேளத்தினால் 16 வயதின் கீழ் B-Divition பிரிவுக்காக நடாத்தப்பட்ட எறிபந்து போட்டியில்
மட்/மம/ ஏறாவூர் அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை  மாணவிகள் சம்பியனாக தெரிவாகினர்.

சாதனை  மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு   பாடசாலையின் அதிபர் SMM. நவாஸ் தலைமையில் SDEC இன் பங்களிப்புடன்  நேற்றைய     தினம் 08/11/2024  வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

பாடசாலை பிரதான வீதியில் இருந்து சாதனை மாணவிகளுக்கு  மாலை அணிவிக்கப்பட்டு  மாணவர்களின் கரங்களின்  கைதட்டல் முழங்க பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு சம்பியன் வெற்றிக்கிண்ணம் மற்றும்  சான்றிதழ்கள் , பதக்கங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

 கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் TMS அஹமட் அவர்களும், கௌரவ அதிதிதியாக மட்டக்களப்பு மத்தி உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் HMM மாஜித் அவர்களும்,SDEC செயலாளர் MLM இம்தியாஸ் மற்றும் உறுப்பினர் சாதிக் அவர்களும்,தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்,உடற்கல்வி ஆசிரியர்கள்,பிரதி அதிபர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

கடந்த வருடம் 16 வயதின் கீழ் C-Divition பிரிவிற்கான எறிபந்து போட்டியிலும் ஏறாவூர் அல் /அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலையே  சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.