மட்டக்களப்பு வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி தற்போதைய நிலைமை .







FREELANCER


கடந்த கால அரசாங்கங்கள் காபட்பாதை போடுவதற்கு தனியாருக்கு கொன்ட்ராக்ட் வழங்கி இருந்தது . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறியலாளர் உட்பட காபட் பாதை சீராக உறுதியாக போடப்பட்டதாக சிபாரிசு செய்திருந்தது . இன்றைய நிலைமை என்ன ?

அசாதாரண காலநிலையாலும் வெள்ளப்பெருக்கினாலும் பாதைகள் உடைக்கப்பட்டு உடனடியாக செப்பனிட வேண்டிய தேவை ஏட்பட்டுள்ளது .

கவனித்து பார்த்தால் பாதை அடியில் போடப்பட்டுள்ள கிரவல் வெள்ளத்தில் அடிபட்டு போகவில்லை , அதற்க்கு மேல் போடப்பட்ட காபட் தான் கடும் சேதம் அடைந்துள்ளது .

உறுதியாக காபட் பாதை போடப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா ?

மட்டக்களப்பு மாத்திரமல்ல நாடு முழுவதும் இதே போன்று தரமற்ற கார்பெட் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது .

இதற்க்கு பொறுப்பு கூறுவது யார் ?

அரசாங்கமா , அதிகாரிகளா, கொன்ட்ராக்ட்காரர்களா ?

ஊழல் கமிஷன் லஞ்சம் நாட்டின் தேசிய வியாதி .இந்த வியாதி இருக்கும் வரை நாடு முன்னேற போவதில்லை .

நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்ததற்கு அசசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்ல முடியாது . நேர்மை இல்லாத , குறுக்கு வழியில் பணம் தேடும் அரசாங்க அதிகாரிகளே காரணம் .