பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை- மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன்

 

 

 

வரதன்



 

 

 பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி  வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை  பாதுகாப்பு பணிகளில் முப்படையினரும்  ஈடுபட்டுள்ளனர் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற உள்ள பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்   இதற்காக மாவட்டத்தில் 6750 அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாகவும்  மாவட்டத்தில்  442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்   வாக்கு  எண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது  இங்கு 46  வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .


மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் பாரிய வன்முறை சம்பவங்கள் துவும்  மாவட்டத்தில் பதியப்படவில்லை எனவும் முப்படையினரும் மாவட்டத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்
தேர்தல் பிரச்சாரப் பணிகள் யாவும்    நிறை வடைந்துள்ள நிலையில் இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் மாவட்டத்தில் தேர்தல்  காலத்தில்  அனர்த்த நிலைகள் ஏற்பட்டால் அவற்றிற் கான முன் ஆயத்த நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன  மாவட்டத்தி லுள்ள சகல பிரதேச செயலகங்களிலும்  முன்னெடுக்க பட்டுள்ளதாகவும்
எனவே பொதுமக்கள் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன் இன்று பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்  போது  மாவட்டத்தில் தேர்தல் கள நிலவரம் சம்பந்தமாகஇவ்வாறு கருத்து தெரிவித்தார்.