மட்டக்களப்பில் கவிஞர் திரு- சிவலிங்கம் அவர்களின் " மாரி காலச் சூரியன் " கவிதை நூல் வெளியீடு .

 

 

 


 


 


 


 







அனோஜன் & செய்தி ஆசிரியர்

 

 

 

 

 

மட்டக்களப்பு ஊறணியில் (10.11.2024 ) கவிஞர் திரு- சிவலிங்கம் அவர்களின் கன்னி வெளியீடான " மாரி காலச் சூரியன் " எனும் கவிதை நூல் வைத்தியர் நாவலோஜிதன் தலைமையில் வெளியிடப்பட்டது, இதில் வைத்தியர் கஸ்தூரி, அன்பழகன் குரூஸ், யுவராஜன், கோணாமலை ஆகியோருடன் வாசகர்களும், உறவினர்களும் இணைந்து தமது இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் இந்நூலை வெளியிட்டனர்.

இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு சிவலிங்கம் அவர்களின் படைப்புகள் 1978 ல் இருந்து சிந்தாமணி , மித்திரன், தினக்குரல் , வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் , சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இலங்கை வானொலியிலும் இவர் கவிதைகள் ஒலி பரப்பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது .

இவருடைய கவிதைகள் தமிழ் இலக்கிய விழா மரபுக்கவிதைக்கான முதலாமிடத்தையும் , கிழக்கு மாகாண சுகாதார கவிதை போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது .

கோடையில் பெய்த மழை போல , நீண்ட காலமாக குழந்தை இல்லா தம்பதியருக்கு கிடைத்த குழந்தை போல இவ் நூல் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்ததோடு பாராட்டுக்களையும் பெற்றது .

எழுபத்து மூன்று கவிதைகள் அடங்கிய இந்நூல் கிழக்கின் பண்பாட்டு விழுமியங்கள் , சில வரலாற்றுப்பதிவுகள் , காதல், பசி , வறுமை , நம்பிக்கை , இயற்கை, கடவுள், அரசியல் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை தொகுப்பாக இந்த மாரிகாலச் சூரியன் உதயமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது