எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐயாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டின் (பவ்ரல் அமைப்பு) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்கள் அடர்த்திக்கு ஏற்ப பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தேர்தல் நடைபெறும் நாளில் அந்த குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும், 340 நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.