சுமார் 5 கிலோ எடையுள்ள Crystal Methamphetamine (ICE) போதைப்பொருளுடன்
தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருளின் மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபா
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதான தாய்லாந்து பெண் ஒருவராவார், இவர் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின்
அதிகாரிகளினால் கிரீன் சேனலில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் பயணப் பொதிகளில் உணவுப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும்
(PNB) இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.