(கல்லடி செய்தியாளர் & செய்தி ஆசிரியர் )
கதிரவன் கலைக்கழகம் , உதவும் கரங்கள் அமைப்பு ஹெல்ப்பவர் நிறுவனம், மற்றும் BATTIMEDIA ஊடக நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குத்துறை கிராமத்தில் சமைத்த உணவுப் பொதிகள் இன்று சனிக்கிழமை (30) வழங்கி வைத்தனர்.
இதன்போது கிராம சேவகர், உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவுனர் சதாசிவம் ஜெயராசா மற்றும் BATTIMEDIA ஊடக நிறுவனம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான சமைத்த உணவுப் பொதிகளைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புதுக்குடியிருப்பு-தெற்கு (50 வீட்டுத்திட்டப் பகுதி) , கிரான் பிரதேசசெயலக பிரிவுக்கு உட்பட்ட பூலாக்காடு, ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500, க்கு மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .
மற்றும் சில கிராமங்களில் உள்ள தேவையுடைய 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .