அமெரிக்காவின் புதிய அரச தலைவரால் அமெரிக்கா வின் மேலான்மையை உலகில் தொடர முடியாது- எஸ்.ஜெயசங்கர்

 


அமெரிக்காவின் புதிய அரச தலைவரால் அமெரிக்கா வின் மேலான்மையை உலகில் தொடர முடியாது. உலகில் மேலான்மை செலுத்தாத அமெரிக்காவை கொண்ட உலக ஒழுங்கை எதிர் கொள்ள நாம் எம்மை தயார்படுத்த வேண்டும் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் கடந்த புதன்கிழமை(6)அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

பராக் ஒபாமா காலத்தில் வெளிவிவகாரங் களில் அமெரி க்கா மிகவும் கவனமாகவே செயற்பட்டது. ஈராக் மற்றும் சிரியா போர்களின் பின்னர் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அமெரிக்கா அக்கறை காண்பிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பைடன் அரசு படையினரை விலக்கிக் கொண்டது அமெரிக்காவின் வரலாற்றுத் தோல்வி என டிறம் விபரித்திருந்தார். இந்த விவகாரத்தில் ட்ரம்ப்மிகவும் கவனமாகவே செயற்படுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிறம், உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-பலஸ்தீனப் போர்களை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான வர்த் தக உறவுகளை மேம்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் சில வரிக் கட்டுப்பாடுகளையும் விமர்சித்துள்ளார்.

அமைதியின் ஊடாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தனது முதன்மையான நோக்கம் என அவர் தெரிவித்துள் ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.