கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றித்தின் அனுசரணையில் 04.12.2024 புதன் கிழமை புதுக்குடியிருப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

                              

                                  







 

 

கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  இடர்கால மனிதாபிமானப் பணியின் ஓர் அங்கமான.... உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்றிட்டம் கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றித்தின் அனுசரணையில்  04.12.2024 புதன் கிழமை புதுக்குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்டது.

கதிரவன் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் கதிரவன் பாலர் பாடசாலையில் நடைபெற்ற இச் செயற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் 38 பேருக்கு ஒன்றியத்தின் சிறப்புமிக்க குருமார்களான

சிவஸ்ரீ க.லோகநாதக்குருக்கள்,
சிவஸ்ரீ சி.குகநாதசர்மா,
சிவஸ்ரீ ந.பத்மநிலோஜன்குருக்கள் மற்றும் கதிரவன் உறவுகள் இணைந்து உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.