கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

 


கினியாவின் (Guinea) இரண்டாவது பெரிய நகரமான N’zérékoré இல் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

Guinean N’zérékoré அணிக்கும் சுற்றுலா Labé அணிக்கும் இடையிலான போட்டியில், போட்டி நடுவர்கள் மீது ஆத்திரமடைந்த விளையாட்டு ரசிகர்கள் திடீரென மைதானத்திற்கு விரைந்த போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆத்திரமடைந்த மக்களை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று பிபிசி கூறுகிறது.

இரு அணிகளின் விளையாட்டு ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறு பிரதமர் Mamadou Oury Bah கேட்டுக் கொண்டுள்ளார்.