விசேட தேவையுடைய 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு .

 


ஆலையடிவேம்பு விசேட தேவையுடையோர் நலன்புரிச் சங்கத்தின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு அண்மையில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

விசேட தேவையுடையோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் தலைமையில் கோளாவில் சிவ கலை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயராஜன் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், தனம் பவுண்டேசன் பணிப்பாளர் க.ரகுபதி, மட்டக்களப்பு சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் செயலாளர் ரீ.லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

 அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரை என்பன நிகழ்த்தப்பட்டதுடன்,

விசேட தேவையுடையவர்களுடைய 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இதன் போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.