இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.

 



இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது.

இருப்பினும் செய்தியாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு  கொல்லப்பட்டசெய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவுஎனசர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு 129  ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தோணி பெல்லங்கர் ஏஎஃப்பி செய்தி நிறுனத்திடம் கூறினார்.

இவ்வாண்டு கொல்லப்பட்ட 55 பேர் பாலஸ்தீனஊடகவியலாளர்கள்  . காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட மோசமான தாக்குதல்களின் விளைவாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக சம்மேளனம் குறிப்பிட்டது.

2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல்-காஸா போர் தொடங்கியது முதல் இதுவரை 138 பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்எனசர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது

மத்திய கிழக்கிற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு மிக மோசமான வட்டாரமாக ஆசியாஅமைந்திருப்பதாக அது கூறியது.

ஆசியாவில் இவ்வாண்டு 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தானில் ஆறு பேரும் பங்ளாதேஷில் ஐவரும் இந்தியாவில் மூவரும் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது