இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சல் பரவல் குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலால் பாதிப்புற்ற 9 ஆயிரம் பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.
நோய் அறிகுறிகள் வெளிப்பட சுமார் 7 தொடக்கம் 14 நாட்களாகக் கூடும். ஆகையால் காய்ச்சல்கள் ஏதும் ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது நல்லது. நோய்த் தொற்றுக்கு ஆளானவரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் சிவத்தல், வாந்தியும் குமட்டலும் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
நோய் நிலைமையை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையேல் கடுமையான விளைவுகளும் உயிரிழப்பும் ஏற்படலாம் என தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன்ன் தெரிவித்தார்.