15 வயதில் வானியற்பியல் தொடர்பாக சுய ஆய்வுகளை மேற்கொண்டு 3 புத்தகங்களை வெளியிட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவன் முஹம்மது அமாசீர் முகமது அமனத்.


      


 






 




















(கதிரவன் இன்பராசா & செய்தி ஆசிரியர்)






15 வயதில் வானியற்பியல் தொடர்பாக சுய ஆய்வுகளை மேற்கொண்டு 3 புத்தகங்களை வெளியிட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவன்

மட்டக்களப்பு காத்தான்குடியில் வசித்து வரும் முகமத் அமனத் ஆதம் பாவா மற்றும் இனுல் ஹிமியா ஆதம்பாவா ஆகியோரின் மகனான முஹம்மது அமாசீர் முகமது அமனத், இவர் காத்தான்குடி அல் ஹிரா மகா வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்று வருகிறார்.

 வானியற்பியலின் மிகக் கடினமான தலைப்புகளான பிளெக் ஹோல் (Blaek Hole), டார்க் மேட்டர் (Dark Matter), மற்றும் ஜெனரல் ரிலேடிவிடி (Einstein's Relativity) பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு அவை பற்றி 3 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

இப் புத்தகங்களை துறைசார்ந்த நிபுணத்துவம் மிக்க நடுவர்கள் மூலம் ஆராய்ந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமானது மாணவனது முயற்சிக்கு உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்க முன்வந்தது.

இதன் அடிப்படையில் இதற்கான அலுவலக ரீதியிலான நிகழ்வு இன்று காத்தான்குடி அல்ஹிரா மகா வித்தியாலயத்தில் சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொது தலைவர் கதிரவன் இன்பராசா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது
வானியற்பியல் துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் பொறியியல் நிபுணரான டெரி ரொஜர்ஸ் லியோன் மாணவனிடம் அவருடைய ஆய்வு பற்றி நிறைய கேள்விகள் கேட்டு மாணவனின் திறனை உறுதி செய்தார்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவன் முகமது அமாசிர் முகமது அமனத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் தங்கப்பதக்கம் நினைவுக் கேடயம் அடையாள அட்டை மற்றும் பைல் போன்றன சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொது தலைவர் கதிரவன் இன்ப ராசா மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளர் சிவ வரதகரன், செயற்குழு உறுப்பினர் டெரி ரொஜர்ஸ் லியோன் மற்றும் மோசஸ் ஜேசுதாசன் போன்றவர்களால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும் பீப்புல்ஸ் ஹெல்பிங் பீப்பி பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இந்த நிகழ்வை  இணைந்து நடத்தியிருந்தன.


இச் சிறிய வயதில் வானியற்பியல் துறையில் ஆய்வுப் புத்தகங்களை வெளியிட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவனை சிறப்பு விருந்தினர்கள், அப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.