இன்று இரவு வியாழன் கோள் நமது பூமிக்கு நெருக்கமாக வருகிறது, வியாழன் கோளை வெறும் கண்களால் பிரகாசமாக பார்க்க முடியும். அதுவும் 2 மடங்கு பெரியதாக.

 


சூரிய குடும்பத்தின் பெரிய அண்ணன் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம் இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது. 

சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூரிய குடும்பம் தோன்றியது. குடும்பம் என்றாலே அதில் தலைவர் என்பவர் இருப்பார்தானே. அது நம்ம சூரியன்தான். 

அப்புறம் சில உறுப்பினர்கள் புதன், வெள்ளி, பூமி, சனி, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன். இதில் பெரிய அண்ணன்தான் வியாழன். சைஸில் பெரியவர். அதனால் பெரிய அண்ணன் பொறுப்பு அவருக்குதான் கரெக்டா இருக்கும். 

பெயருக்கு ஏற்றார் போல, எல்லா கஷ்டங்களையும் தாங்கி கொண்டு அவர் தனது இளைய சகோதரர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். புரியும்படி சொல்வதெனில், பூமிக்கு விண்கற்களால்தான் ஆபத்து.  டைனோசர்கள் அழிந்ததும் இப்படித்தான். ஆக விண்கற்கள் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்ற வியாழன் உதவி செய்து கொண்டிருக்கிறது. 

வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி அதிகம். எனவே அதை தாண்டி சூரிய குடும்பத்தில் நுழையும் அனைத்து விண்கற்களையும் அது ஈர்த்து தனக்குள் போட்டுக்கொள்ளும். கடந்த பல கோடி ஆண்டுகளாக வியாழன் அண்ணன் நமக்காக இதை செய்து கொண்டிருக்கிறார். 

இந்த பணி இன்னும் சில கோடி ஆண்டுகள் வரை கூட தொடரும். இப்படி இருக்கையில், வியாழன் கோளை பற்றி தெரிந்துக்கொள்வதற்கும், அதை பார்த்து ரசிப்பதற்கும் விஞ்ஞானிகள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் கூட ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த ஆர்வத்திற்கு விருந்தளிக்கும் வகையில், இன்று இரவு வியாழன் கோள் நமது பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

ஒவ்வொரு 13 மாதங்களுக்கு ஒரு முறையும் இப்படி நடக்கும். இப்படி நடக்கும்போது வியாழன் கோளை வெறும் கண்களால் பிரகாசமாக பார்க்க முடியும். அதுவும் 2 மடங்கு பெரியதாக. 

அதேபோல அதிலிருந்து வரும் ஒளியும் வழக்கத்தைவிட 25% அதிகமாக இருக்கும்.

பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரம் 92 கோடி கி.மீ ஆகும். அவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கிரகம் வழக்கத்தைவிட 25% அதிக பிரகாசமாக தெரிவது நிச்சம் பிரபஞ்ச அதிசயம்தான்.  R