சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று . காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.
மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.