சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-2024.12.29



 





  வரதன்

 

 

 

சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான  நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று  2024.12.29      புதிய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது.

 மட்டக்களப்பு   மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த நிவாரண பொருட்கள் சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை நாட்டுக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.

மாவட்டத்தில் முதல் கட்டமாக 100 பேருக்கு 6500 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது