மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒளி விழா-2024

 

 

 


 


 

 


 



 








































































FREELANCER





மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்துதலில் வருடாந்த ஒளிவிழா 2024.12.13 பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வணபிதா பிலிப் ரஞ்சன்குமார் , மற்றும் வணபிதா வினோத் சபாபதி பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில் வணபிதா பிலிப் ரஞ்சன்குமார் பாலன் யேசுவின் பிறப்புத் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.

பிரதேச செயலக உத்தியோகத்தினரின் கரோல் கீதங்கள் பாடப்பட்டதோடு , நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன .

பிரதேச செயலக உத்தியோகத்தினரின் சிறார்களின் நடன நிகழ்வு மற்றும் பாலன் யேசுவின் பிறப்பு பற்றிய குறு நாடகமும் அரங்கேற்றப்பட்டன .

பிரதேச செயலாளர், மற்றும் அதிதிகளால் சிறார்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன .

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட உதவி பிரதேச செயலாளர்களா திருமதி . லக்ஷனா பிரசாந்தன் ,

சுபா சதாகரன் மற்றும் செயலக உத்தியோகத்தினரும் பரிசு பொதிகளை வழங்கி வைத்தனர் .

அத்தோடு நத்தார் பாப்பா வருகை தந்து நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார் .