FREELANCER
மட்டக்களப்பு அரசடி கேம்பிரிஜ் முன்பள்ளி பாடசாலையின் பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் T. மேகராஜ் மற்றும் டிசாந்தினி நடராஜா( Education., Ennovation, leadership and social service (USA) - coordinator)
(International lions club - Batticaloa supreme - voice coordinator ( lady lion) அவர்களும் கலந்து கொண்டார்கள்
கேம்பிரிஜ் முன்பள்ளி பாடசாலை முதல்வர் திரு .திருமதி சாமுவேல் ஜெயா கௌரவ அதிதியாக பங்கேற்றனர்.
முன்பள்ளி பாடசாலை முதல்வர் சாமுவேல் ஜெயா தலைமையில் இடம் பெற்ற 9ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் 21 முன்பள்ளி சிறார்கள் கௌரவிக்கபட்டார்கள் .
மட்டக்களப்பு அரசடி கேம்பிரிஜ் முன்பள்ளி பாடசாலையில் பயிலும் 60 சிறார்களும் 3 ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள் .
நிகழ்வில் அழகிய கண்கவரும் குழு நடனங்களும் , சைகை மூலமான பாலன் பிறப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது . கண்கவர் ஆடைகளுடன் சிறுமிகளின் BEACH நடனமும் மிகவும் இடம் பெற்றது .
நிகழ்வின் முடிவில் அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசு பொதிகளும் , சான்றிதழ்களும் ,மெடல்களும் , சட்டகம் செய்யப்பட்ட பிரத்தியேக புகைப்படங்களும் வழங்கப்பட்டன .
இவ் நிகழ்வுக்கு பாடசாலை சிறார்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் , நலம்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .