FREELANCER
மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில் 29.12.2024 அன்று நத்தார் தின பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை பல்கலைக்கழக மாணவர்களும் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சக ஊழியர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.
நிகழ்வுக்கு மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகம் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் A.D கமலநாதன் தலைமை தாங்கினார் .
பிரதம அதிதியாக மட்டக்களப்பு ஆயர் இல்ல நிதிப் பொறுப்பாளர் வண பிதா ஸ்டானீஸ் லாஸ் கலந்து கொண்டார் .
அதிதிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது .
கரோல் கீதம் பல்கலைக்கழகமாணவிகளினால் பாடப்பட்டதை தொடர்ந்து
நடனங்களில் கலந்து கொண்ட முன்பள்ளி மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுகள் வழங்கப்பட்டன .
மேலும் ரசிக்குமார் ஜீவராணி ஆகியோரால் தனிப்பாடல் பாடப்பட்டன .
பிரதம அதிதி உரையை தொடர்ந்து குறுகிய கால ஆங்கில பாட நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது .
பல்கலைக்கழக மாணவிகளின் குழு நடனமும் நடை பெற்றது
.
நிகழ்ச்சி முடிவில் கிறிஸ்மஸ் தாத்தா அரங்கத்துக்கு வருகை தந்து நடனமாடி சபையோரை மகிழ்வித்தார்