வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் அதன் தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு.சதாசிவம் ஜெயராஜா அவர்களின் தலைமையில் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் C-REP ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழ் உறவான கனடாவைச் சேர்ந்த உயர்திரு.மகேஸ்வரன் கணேசானந்தன் அவர்களின் நிதி அனுசரணையுடன் (2024.12.30) இன்றைய தினம் அறநெறிக்கல்வியையும் எதிர்கால சிறார்களின் ஒழுக்க விழுமியங்களையும் மேம்படுத்தும் இலக்குடன் திருக்குறள் மூலமான மனித மேம்பாடுக்கல்வி அங்குராற்பண நிகழ்வு மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூத்த சைவப்புலவரும் பண்டிதருமான திருமதி சி.ஞானசூரியம், ஓய்வுநிலை அதிபரும் அறநெறிப்பாடசாலலை அதிபருமான திருமதி சக்தி அருட்ஜோதி, சிவதொண்டர் திருக்கூடத்தலைவர் சிவதொண்டன் க.கமல்ராஜ் ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் திரு.த.அருட்ஜோதி செங்கலடி பிரதேச இணைப்பாளர் திரு.கா.ஜெயபாலன் மற்றும் திருக்குறள் பற்றாளர்களின் பங்கு பற்றலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
சிறப்புப்பயிற்சி பெற்ற கிழக்கு பல்கலைக்கழக இளம் பட்டதாரிகளான செல்வி.கிருஷ்ணா மற்றும் செல்வி.யுகா ஆகியோர் வளவாளர்களான செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் போது சிவதொண்டர் திருக்கூடத்தினால் திருவள்ளுவர் திருவுருவப்படம் உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது . மாணவர்களுக்கு பரிசில் பொருட்களும் வழங்கப்பட்டன.
உதவும் கரங்கள் நிறுவனம் பின்தங்கிய பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் அக்கறையுடன் செயற்படுவதை அதிதிகள் பாரட்டியமை சிறப்பம்சமானது.