FREELANCER
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கோஸ்பல் சபையின் அனுசரணையில் சபை மண்டபத்தில் ஓய்வு நாள் பாடசாலை சிறார்களின் ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக 2024.12.08 அன்று இடம் பெற்றது .
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் , மாவட்ட செயலாளருமான திருமதி .ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார் .
மேலும் , கௌரவ விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சனி முகுந்தன் அவர்களும் , விசேஷ அதிதிகளாக ஜகத் விசந்த DIG-மட்டக்களப்பு , உவன் பிரதீப் கேணல் மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் , KHMSS-பண்டார குரூப் கேப்டன் இலங்கை விமானப்படை முகாம் மட்டக்களப்பு ஆகியோர் கலந்து கொண்டனர் .
வணக்கத்துக்குரிய P.W மரியதாஸ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை ஏற்றிருந்தார் .
ஆரம்ப நிகழ்வாக ஜெபம் , அதனை அடுத்து வேத வாசிப்பு தொடர்ந்து வரவேற்பு உரை இடம் பெற்றது .
.தலைமை உரையை வணக்கத்துக்குரிய P.W-மரியதாஸ் நிகழ்த்தி இருந்தார் .
மேலும் பிரதம , கௌரவ, விசேட அதிதிகளால் உரைகள் நிகழ்த்தப்பட்டன .
ஒய்வு நாள் பாடசாலை சிறார்களால் குழு நடனம் மற்றும் கிறிஸ்து பிறப்பை பற்றிய நாடகம் நடத்தப்பட்டன .
ஒய்வு நாள் பாடசாலை ஆசிரியர்களின் நடனமும் இடம் பெற்றது . நிகழ்வின் முடிவில்
ஒய்வு நாள் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் அதிதிகளால் பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .
ஒளிவிழாவில் மாணவர்களின் பெற்றோரும் ,பிரதேச வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .மேலும் கோஸ்பல் சபையில் அங்கம் வகிக்காத சிறார்களும் ஒளிவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்