மட்டக்களப்பு கல்லடி பொனிங்ரன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா -2024



 

























FREELANCER





மட்டக்களப்பு கல்லடி பொனிங்ரன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது கல்லடி உப்போடை துளசி கலாச்சார மண்டபத்தில் 2024.12.08 இடம் பெற்றது .

நிகழ்வுக்கு பிரதான விருந்தினராக மட்டக்களப்பு உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி அனுரேகா . விவேகானந்தன் கலந்து கொண்டார்,

கௌரவ அதிதியாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா அவர்களும், விஷேட அதிதிகளாக கல்லடி சித்தி விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களான ஹரிதாஸ் மற்றும் குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் அதிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இங்கு பிள்ளைகளின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆடல் பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும் , பேச்சு போன்ற நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

விழாவில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்களை வழங்கி அதிதிகள் அவர்களை கௌரவித்தனர்.

குறித்த விழாவை சிறப்பான முறையில் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளி ஆசிரியர்களை பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.