மிகக்குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்கள் பத்திரிகைகள் மத்தியில் அதிக
வரவேற்பைப் பெற்ற 'தரணி' பத்திரிகையின் பெருமைக்குரிய நான்காம் ஆண்டு
நிறைவு விழா 07 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வு இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தலைமையில், கொழும்பில் உள்ள விஹார மகாதேவி பூங்காவில் நடைபெற்றது.
பெண்கள் பத்திரிகைகளின் பாரம்பரிய கட்டமைப்பில் இருந்து விலகி, தரணி
நாளிதழ் 2020 ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை மற்றும் புதுமைகளுடன் தொடங்கியது.
இலங்கை தொழில்முனைவோரின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கும் விற்பனை
செய்வதற்கும் தேவையான விற்பனை கூடங்கள் இந்நிகழ்வில்
அமைக்கப்பட்டிருந்ததுடன், குழந்தைகளின் கலைத் திறனை மேம்படுத்தும்
நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
வருடாந்த விழாவின் பிரதான நிகழ்வு இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்
திருமதி குஷானி ரோஹணதீர மற்றும் லிபர்ட்டி பப்ளிஷர்ஸின் ஸ்தாபகரும்
பாராளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவாளர் திலித் ஜயவீர தலைமையில்
இடம்பெற்றது.
இதன்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கும் உலர் உணவுகளும் வழங்கப்பட்டன.
மேலும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்பின் 'தரணி அழகி'யை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது. இதன்போது,
இசுரி நிம்சரா 'தரணி அழகி'யாக நடுவர் குழாத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், சமூக ஊடகங்களில் இருந்து அதிக விருப்பு வாக்குகளை பெற்று மிகவும்
பிரபலமான 'தரணி அழகி'யாக அருணி நிகேஷாலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் விஹார மஹா தேவி திறந்தவெளி அரங்கில் ரவி ரொய்ஸ்டர் தலைமையிலான 'ரட்டா' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.