கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹட்டன், பின்னதுவ, மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெப்பத்திகொல்லாவ மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு பாதசாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் வீதி விபத்துக்களில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை 22,967 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 2,141 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,552 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.