27 ஆண்டுகளுக்கு பின் இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இடம்பெற்ற மட்டக்களப்பு புளியந்தீவு லைட் ஹவுஸ் ஜெப மையத்தின் ஒளிவிழா இடம் பெற்றது.

 



 

 

 

பாதுகாப்பு அமைச்சினால் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் இந்த தேவாலயம் ஆனது மக்களின் பாவனைக்காக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதன் பின்பு இடம்பெற்ற முதலாவது இயேசு பாலகனின் பிறப்பை வரவேற்கும் ஒளிவிழா நிகழ்வு  மிகச் சிறப்பாக ஆலயத்தின் பிரதான போதகர் விஜயன் தலைமையில் இடம் பெற்றது.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். 

இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இடம்பெற்ற இந்த ஒளி விழா நிகழ்வில் சகோதர மொழியிலும் கலை நிகழ்வுகள் இடம் பெற்றமை விசேட அம்சமாகும்.

50 க்கு மேற்பட்ட வறிய பெற்றோரை இழந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் அன்பளிப்புக்களும் அதிதிகளால் இங்கு வழங்கி வைக்கப் பட்டமை  விசேட அம்சமாகும். ஆலயத்தின் பங்குத்தந்தை விஜயன் போதகர் அவர்களால் ஆசிரியரை செய்தியும் வழங்கி வைக்கப்பட்டது.

இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் சிறார்களின் அழகிய நடன நிகழ்வுகள், அதிதிகளின் உரை, கரோல் கீதங்கள், இயேசு பாலகனின் பிறப்பை நினைவூட்டும் கிறிஸ்மஸ்சினை வரவேற்கும் நடனங்கள்  நத்தார் தாத்தாவின் நடனம் மற்றும் சிறார்களுக்கான பரிசு பொருட்கள் வழங்கலும்  இங்கு இடம் பெற்றது.

சிறப்பு அதிதிகளாக முன்னாள்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி  கிரேஸ் நவரத்தினம் - முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி.சொர்ண ராஜா மற்றும் வைத்தியர் அஞ்சலா ஆகியோர் கலந்து கொண்டனர்.