ஜப்பானில் இருந்து வந்த 40 அடி கொள்கலனுக்குள் கொண்டுவரப்பட்ட Toyota கார் சிக்கியது .

 


நேற்று (6) கொழும்பு துறைமுகத்தில் சட்டவிரோதமான கார் இறக்குமதி முயற்சி ஒன்றை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

ஜப்பானில் இருந்து வந்த 40 அடி கொள்கலனுக்குள் வாகனத்தின் full  Body உருவமும் மறுசீரமைக்கப்பட்ட Toyota Prius கார் ஒன்றையே கைப்பற்றினர்.

நவம்பர் தொடக்கத்தில் வந்த இந்த கண்டெய்னர், சந்தேகத்தின் பேரில் சுங்கப் பிரிவினரால் பிடித்து வைக்கப்பட்டது. மற்றும் உள்ளிருந்த பொருட்களை அகற்றுவதற்கு உரிமையாலர் சரியான நேரத்தில் வராத வரை திறக்கப்படாமல் இருந்தது. 

இதையடுத்து இறக்குமதியாளரை வரவழைத்த அதிகாரிகள், சட்ட விரோதமான பொருட்களை கண்டுபிடிக்க கன்டெய்னரை திறந்த போது உள்ளிருந்த கார் சிக்கியது.

அண்மைய மாதங்களில், சுங்கக் குழுவானது, சுங்கக் கட்டளை மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய வகையில், இதேபோன்று மெர்சிடிஸ் பென்ஸ், BMW மற்றும் பல ஹைபிரிட் கார்களையும் கைப்பற்றியதாக சுங்க RTF இயக்குனர் திலக் சுரவீர தெரிவித்தார்.