மாணவர்களுக்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜய
திஸ்ஸ தெரிவித்தார்.