மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஏற்பாட்டில் 90 லட்சம் வெள்ள நிவாரண பொதிகள் 2700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பூரண அனுசரணையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மண்டூர் பிரதேச மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஆலயம் மூன்றில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வு மட்டக்களப்பு போரதீவு பற்று பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் கீழ் மண்டூர் மண்டூர் 1மண்டூர் 2 மண்டூர் 3மண்டூர் தெற்கு கோட்ட முனை பாலமுனை, தம்பலத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 2700 குடும்பங்களுக்கு 90 லட்சம் பெறுமதியான நிவாரண பொருள் வழங்கி வைக்கப்பட்டன.
இம்மாதம் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மண்டூர் பிரதேசம் முழுவதும் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது