(கல்லடி செய்தியாளர் & செய்தி ஆசிரியர்)
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை அருள்மிகு ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்றும் புதன்கிழமை (11) மற்றும் நாளை வியாழக்கிழமை (12) இடம்பெறுகிறது.
இதன்போது ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார்,விநாயகப் பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த அடியவர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
இந்நிலையில் இவ்வாலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) திரயோதசி திதியும்,பரணி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய மு.ப 9.30 மணி முதல் 10.36 மணி வரையுள்ள மகாலக்கின சுபமுகூர்த்த வேளையில் மட்டக்களப்பு ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு ஞானாபானு கிரியா திலகம் சிவப்பிரம்மஸ்ரீ சரவணாகாசிபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான குருமார்கள் நிகழ்த்தி வைக்கவுள்ளனர்.
இதேவேளை இவ்வாலயம் கடந்த 600 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஆலயமாகும். அத்தோடு இவ்வாலயத்தைச் செங்குந்தர் பரம்பரையினர் நிர்வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.