FREELANCER
2024.12.03 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு battimedia ஊடக அனுசரணையில் கதிரவன் பட்டிமன்ற பேரவையும் இணைந்து அவர்களின் ஒழுங்கு படுத்துதலில் மாற்று திறனாளிகளை உற்சாகப்படுத்தி , மகிழ்வூட்டும் நிகழ்வு கதிரவன் இல்லத்தில் நடை பெற்றது
கதிரவன் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர், தாழங்குடா-03 வேடர்குடியிருப்பு கிராமசேவை உத்தியோகத்தர், உதவும் கரங்கள் தலைவர், battimedia பணிப்பாளர் மற்றும் கதிரவன் உறவுகள் என பலரும் பங்குபற்றினர்.
நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகளின் மகிமைகள் பேசப்பட்டதோடு, தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதி வழங்கிவைக்கப்பட்டது.